
Nadi Jothidam
பாரம்பரிய ஓலைச்சுவடிகளில் பதியப்பட்ட உங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் – நாடி ஜோதிடத்தின் அற்புத சக்தி.
நாடி ஜோதிடம் என்பது உலகின் மிகப் பழமையானவும், ஆன்மீக ரீதியாக மிக உயர்ந்த ஜோதிட முறைகளில் ஒன்றாகும். இது சாதாரண ஜோதிடம் போல் கணிப்புகளை மட்டுமே வழங்காது; உங்கள் கடந்த பிறவிகள், இந்தப் பிறவி மற்றும் எதிர்காலம் குறித்து ரிஷிகள் தங்களின் தியான நிலையிலேயே எழுதி வைத்த ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஓலைகள் தமிழகத்தின் வைதேஸ்வரன் கோயில் போன்ற புனித தலங்களில் பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஜீவனின் கர்மப் பயணமும், அதன் காரண – விளைவுகளும் இந்த ஓலைகளில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.